என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலகக்கோப்பை கிரிக்கெட்"
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.
13 ரன்னில் வார்னருக்கு கேட்ச் செய்யப்பட்டது. முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சை ஓட ஓட விரட்டினர். ருத்ரதாண்டவம் ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரும் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் மார்ஷ் 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய வார்னர் 163 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இரட்டை சதம் அடிக்க வாய்ப்பிறந்தது.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்பலாக விளையாடினர். இதனால் 400 ரன்கள் குவிக்க வேண்டிய ஆஸ்திரேலியா 367 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 5 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 368 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அப்துல்லா ஷபீக் 64, இமாம் உல் ஹக் 71, பாபர் அசாம் 17, சவுத் ஷகீல் 34, முகமது ரிஸ்வான் 47, இப்திகார் அகமது 26, முகமது நவாஸ் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதானல் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
- ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
- லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
ஐதராபாத்:
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா ௧௦௮ ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்மழை பொழிந்தது. குயிண்டன் டாக் (100 ரன்கள்), வாண்டர் உசேன் (108 ரன்கள்) ஏய்டென் மார்கரம் (106 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குசல் பெரேரா 7, குசல் மெண்டிஸ் 76, சதீர சமரவிக்ரம 23, தனஞ்ஜெயா டி சில்வா 11, சரித் அசலங்கா 79, தசுன் ஷனகா 68, கசுன் ராஜிதா 33, மதீஷா பதிரனா 5, தில்ஷான் மதுஷங்கா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் இலங்கை அணி 44.5 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெலிங்டன்:
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பீல்டிங் செய்கையில் காயமடைந்து ஓய்விலிருந்து திரும்பிய கேன் வில்லியம்சன் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் டிம் சவுதி , டிரென்ட் பவுல்ட் போன்ற திறமையான பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி பின்வருமாறு;-
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் பவுல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
- உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
1992-ம் ஆண்டை போல இந்த உலக கோப்பையில் ஆட்ட முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை ரவுண்டு ராபின் முறையில் மோதும், ஒவ்வொரு அணிக்கும் 9 லீக் ஆட்டம் இருக்கும்.
‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மோதும் ஆட்டத்தை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். அதன் காரணமாக இந்தியா மோதும் ஆட்டத்தின் டிக்கெட் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து மோதும் ஆட்டத்தை விட இந்தியா விளையாடும் போட்டிக்கு டிக்கெட் விலை கூடுதலாக இருக்கிறது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. சவுத்தம்டனில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு ஹோட்டல் பாக்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ.63,500 ஆகும். இதோடு வாட் வரியும் கூடுதலாகும்.
இதே மைதானத்தில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் மோதும் ஆட்டத்துக்கு ஹோட்டல் பாக்சின் டிக்கெட் விலை ரூ.54,418 + வாட்வரி ஆகும். கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் வரை இந்தியா மோதும் போட்டிக்கு கூடுதல் விலையாகும்.
இந்த ஸ்டேடியத்தில் உள்ள ரூப்டாப் ஹோமர் ஸ்டாண்டில் இந்தியா மோதும் ஆட்டத்துக்கு டிக்கெட் விலை ரூ.31 ஆயிரம் ஆகும். இங்கிலாந்து மோதும் போட்டிக்கு இதே டிக்கெட் விலை ரூ.27,159 ஆகும்.
அதே போல இந்தியா- இலங்கை அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதும் ஆட்டத்துக்கும் டிக்கெட் விலை அதிகமாகும். ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் டிக்கெட் விலை ரூ.45 ஆயிரமும், இதே மைதானத்தில் இங்கிலாந்து மோதும் போட்டியின் ஹாஸ் பிட்டாலிடி பாக்ஸ் விலை ரூ.31 ஆயிரமாகும்.
இந்தியா- பாகிஸ்தான் (ஜூன் 16) மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. இந்திய அணி மோதும் மற்ற ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுவிட்டன. 2 சதவீத டிக்கெட்டுகள் எஞ்சியுள்ளன. #WorldCup2019
உலகக்கோப்பைக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் குறைந்த நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. இதனால் வீரர்களின் வேலைப்பளு குறித்து அனைத்து நாடுகளும் கவலை அடைந்துள்ளது.
ஆனால் ஐபிஎல் தொடர் உலகக்கோப்பைக்கான சிறந்த தளம் என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
சூழ்நிலைகள், அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்வது, நெருக்கடிகளை தனக்குள் எடுத்துக் கொண்டு விளையாடுவது உலகக்கோப்பைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கான சிறந்த தளமாகும்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்